Advertisment

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!

Driver jailed for 10 years for girl case pocso act

Advertisment

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் வீட்டுக்கருகில் பண்ருட்டியைச் சேர்ந்த விஜயகுமார் (26) என்பவர் வசித்துவந்தார். இவர் ஓட்டுனராக பணி செய்துவருகிறார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு அந்தப் பெண்ணின் 17 வயது மகளை ஓட்டுநர் விஜயகுமார், கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி, போக்சோ சட்டத்தின் கீழ் விஜயகுமார் மீது வழக்குப்பதிவு செய்தார்.

இந்த வழக்கு மீதான விசாரணை கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இறுதி கட்ட விசாரணை முடிந்த நிலையில், போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எழிலரசி, நேற்று தீர்ப்பு வழங்கினார்.

Advertisment

அந்த தீர்ப்பில், ‘சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநர் விஜயகுமாருக்கு இரண்டு பிரிவுகளின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், மூன்று பிரிவுகளில் தலா ரூ.2,000 அபராதம் என மொத்தம் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

நீதிபதியின் தீர்ப்பையடுத்து ஓட்டுநர் விஜயகுமார் நீதிமன்ற உத்தரவின்பேரில் கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

Cuddalore Prison
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe