Advertisment

போதையில் ஓட்டுநர்; பேருந்தை இயக்கிய நடத்துநர்- பயணிகள் அதிர்ச்சி

govt bus

பேருந்து ஓட்டுநர் மது போதையில் இருந்ததால் நடத்துநர் பேருந்தை இயக்கிய விவகாரத்தில் அவ்விருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி நோக்கி அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்து ஒரு சீராக செல்லாததால் அச்சம் அடைந்த பயணிகள் பேருந்து ஓட்டுநரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இத்தனை நேரம் பேருந்தை ஓட்டிக்கொண்டு வந்தவர் நடத்துநர் என்றும் நடத்துநர் இருக்கையில் அமர்ந்து இருந்தவர் ஓட்டுநர் என்றும் தெரியவந்தது. ஓட்டுநர் மது அருந்தி போதையில் இருந்ததால் நடத்துநர் பேருந்தை இயக்கிச் சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் பேருந்தை அங்கேயே நிறுத்த சொல்லி பாதி வழியிலேயே இறங்கிவிட்டனர். இதனை அடுத்து அப்பயணிகளுக்கு வேறொரு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இது குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Advertisment

kanjipuram Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe