Skip to main content

உரிமையாளர் வீட்டில் திட்டமிட்டு கொள்ளையடித்த கார் டிரைவர்...!

Published on 22/09/2020 | Edited on 22/09/2020

 

 

The driver of the car robbed the owner's house ...!

 

 

விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை, இங்கு பிரபலமான வக்கிர காளியம்மன் சந்திரமவுலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வார்கள். அப்படிப்பட்ட இந்த பரபரப்பான ஊரைச் சேர்ந்தவர் பழனி. இவர் இந்த பகுதியில் கல்லுடைக்கும் கிரசர் வைத்து நடத்திவருகிறார். சம்பவத்தன்று பழனி மனைவி மட்டும் உறவினரின் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வெளியூர் சென்றிருந்தார். 

 

பழனியும் அவரது மகன் விக்னேஷ் என்பவரும் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். சம்பவத்தன்று இரவு பழனி சாப்பிட்டுவிட்டு தன் மகன் விக்னேஷிடம் கல்கிரஷ்ரருக்கு நான் இரவு பாதுகாப்புக்கு செல்கிறேன் நீ மட்டும் வீட்டில் பாதுகாப்பாக இரு என்று கூறிவிட்டு சென்றுள்ளார். 

 

அவரது மகன்  விக்னேஷ்  வீட்டில் உள்ள ஒரு அறையில் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். அன்று நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். ஒரு அறையில் இருந்த பீரோவை உடைத்துள்ளனர். அதிலிருந்த எட்டு லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். 

 

காலையில் கிரஷர் கம்பெனியில் இருந்து வீடு வந்து பழனி பார்த்தபோது, கொள்ளையர்கள் பீரோவை உடைத்து ரூ. 8 இலட்சம் கொள்ளையடித்து சென்றுள்ளது தெரியவந்துள்ளது. உடனடியாக வானூர் காவல் நிலையத்தில் பழனி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் மீது போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

 

இதனடிப்படையில் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த முரளி என்பவரை பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர். அவர் அளித்த தகவல்கள் பரபரப்பாகியுள்ளது. முரளி அளித்த வாக்குமூலத்தில் சோரப்பட்டு பகுதியைச் சேர்ந்த முரளி ஆகிய நான் பழனி இடம் ஏற்கனவே கார் டிரைவராக வேலை செய்து வந்தபோது அவர் வீட்டில்  நிறைய பணப்புழக்கம் இருப்பதை நேரில் பார்த்துள்ளேன்.  இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பழனியிடம் இருந்து வேலையை விட்டு நின்று விட்டேன். பிறகு அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்வாணன் என்பவரிடம் பழனி வீட்டில் நிறைய பணப்புழக்கம் உள்ளது அதை கொள்ளை அடிக்கலாம் எனக்கூறி நாங்கள் இருவரும் திட்டம் தீட்டினோம். அதன்படி நான், தமிழ்வாணன் ஆகிய இருவரும் கொள்ளையடிக்க முடிவு செய்தோம். எங்களுடன் இணைந்து கொள்ளையில் ஈடுபட்ட செந்தில்குமார், அருளரசன், கார்மேகம் ஆகியோரையும் கூட்டு சேர்த்து கொண்டோம்.  

 

எப்படியோ கண்டுபிடித்த போலீசார் எங்களை கைது செய்துள்ளனர் என்று முரளி வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் இவர்களுடன் கொள்ளையில் சம்மந்தப்பட்ட மேலும் 2 பேர் அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பழனி வீட்டில் கொள்ளையடித்த எட்டு லட்சம் பணத்தில் நகை மற்றும் செல்போன் வாங்கி ஆடம்பரமாக இருந்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளனர் கொள்ளையர்கள். அவர்களிடமிருந்து ஒரு செல்போனையும், செலவு செய்தது போக மீதி இருந்த ஒரு லட்சம் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பிடிபட்ட கொள்ளையர்கள் மீது வானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைத்துள்ளனர். கொள்ளை குறித்து மேலும்  போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு; மதுரையில் பரபரப்பு!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tiffin box range Sensation in Madurai

மதுரை அருகே டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு என்ற பகுதியில் காரின் அருகே நின்று கொண்டிருந்தவர் மீது நேற்று இரவு (20.04.2024)  டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்ட இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் அங்கிருந்த நவீன்குமார் என்பவர் காயமடைந்தார்.

மேலும் டிபன் பாக்ஸ் குண்டு வீசப்பட்டதில் நவீன்குமாருக்கு அருகில் இருந்த ஆட்டோக்காரர் கண்ணன் என்பவர் காயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த கீழவளவு காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த இருவரையும் போலீசார் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

Next Story

காரும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து; 5 பேர் உயிரிழப்பு!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
madurai thirumangalam nearest two wheeler car incident

மதுரையில் காரும் இரு சக்கர வாகனமும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை என்ற பகுதியில்  திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில் காரும் இரு சக்கர வாகனமும் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி காரில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் மதுரையில் உள்ள வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் தளவாய்புரத்தில் உள்ள கோவிலுக்கு ஆன்மிகப் பயணம் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிய நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பலியானவர்களின் உடல்கள் திருமங்கலம் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் படுகாயம் அடைந்த ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.