Skip to main content

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய பணியாளர்கள்! (படங்கள்)

Published on 06/01/2022 | Edited on 06/01/2022

 

 

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் நீரேற்றும் பணியாளர்கள், நிரந்தர தொழிலாளர்களும், ஒப்பந்த தொழிலாளர்களும் இரவு பகல் பாராமல் வாரியத்தின் நிர்வாக வழிகாட்டுதலுடன் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் பணியாளர்களின பல்வேறு கோரிக்கைகள் தமிழக அரசும் வாரியத்தாலும் தொடர்ந்து கண்டுகொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

 

இது தொழிலாளர்கள் மத்தியில் பெரும் கவலையும் மன  உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசும் குடிநீர் வாரியமும் உடனடியாக கீழ்க்கண்ட நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதே போல் கரோனா  பேரிடர் காலத்தில் தொடர்ந்து பணியாற்றும் தொழிலாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். அதோடு நிலுவையில் உள்ள கரோனா கால ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

 

வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்கள் முறையை கைவிட்டு வாரியமே நேரடியாக செயல்படவேண்டும். தனியார்மயமாக்களை கைவிடவேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் மாதச் சம்பளத்தை மாதம் முதல் தேதியன்று  வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 


 

சார்ந்த செய்திகள்