Skip to main content

குடிநீர் குழாயில் சாக்கடை நீர் கலந்ததால் பொதுமக்கள் வாந்தி, பேதி, மயக்கம்! 

Published on 09/01/2020 | Edited on 09/01/2020
Publicகடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஆலந்துறைபேட்டை கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  இக்கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலமாக,  பொது மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  இந்நிலையில் தண்ணீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு,  சாக்கடை நீர் கலந்துள்ளதாக  கூறப்படுகிறது.  


 

அவ்வாறு அசுத்தமான குடிநீரை அருந்திய, அக்கிராம மக்கள் 10-க்கும் மேற்பட்டோர் வாந்தி பேதி , மயக்கம் உள்ளிட்ட உபாதைகளுக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த கருவேப்பிலங்குறிச்சியினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று,  விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு, சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.   
 

இச்சம்பவம் குறித்து கருவேப்பிலங்குறிச்சி  காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மாடு மோதி விபத்து; சிறப்பு உதவி ஆய்வாளர் பலி!

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
Cuddalore dt Tittakudi police station ssi Bharathidasan incident

கடலூர் மாவட்டம் திட்டக்குடி காவல் நிலையத்தில் சிறப்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பாரதிதாசன். இவர் திட்டக்குடி - விருத்தாசலம் நெடுஞ்சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென சாலையில் வந்த மாடு ஒன்று பாரதிதாசனின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதனால் கீழே விழுந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பாரதிதாசன் மீது அச்சமயத்தில் அங்கு வந்த அரசு பேருந்து அவர் மீது ஏறியது. இந்த விபத்தில் பாரதிதாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்று சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் நாள்தோறும் விபத்துகளைச் சந்திப்பதாக அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்துப் பல முறை புகார் அளித்து முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மாடு மோதிய விபத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Cuddalore dt Tittakudi police station ssi Bharathidasan incident

முன்னதாக விருத்தாசலம் அருகே பரவலூர் - கோமங்கலம் இடையே பைக்கில் சென்ற இரு இளைஞர்கள் லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தனர். இந்த விபத்தை வேடிக்கை பார்க்க அப்பகுதியில் குவிந்த கூட்டத்தின் மீது கார் ஒன்று மோதியது. இதில் 17 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் தொடர்புடைய லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதே சமயம் மற்றொரு விபத்திற்குக் காரணமாக கார் ஓட்டுநரைப் பிடித்து அங்கிருந்தவர்கள் சரமாரியாகத் தாக்கினர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் காரணமாக விருத்தாசலம் - சேலம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் வெகுவாக அவதியடைந்தனர். 

Next Story

“கிணற்றில் கலக்கப்பட்டது மனிதக் கழிவு அல்ல...” - குடிநீர் வாரியம் விளக்கம்!

Published on 15/05/2024 | Edited on 15/05/2024
What is mixed in the well is not human waste Drinking water board explanation 

குடிநீர் கிணற்றில் கலக்கப்பட்டது மனிதக் கழிவு அல்ல தேன் அடை என தெரியவந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள கஞ்சனூர் அருகே உள்ள கே.ஆர். பாளையம் திறந்தவெளி கிணற்றில் மனித கழிவு கலக்கப்பட்டதாக கிராம மக்கள் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்திருந்தனர். இந்த கிணற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீரைத்தான் கே.ஆர். பாளையம் கிராமத்தில் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மோட்டார் மூலம் விநியோகிப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த புகார் குறித்து விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் கிணற்றின் தடுப்பு சுவரின் மீது ஏறி அமர்ந்து மர்ம நபர்கள் கிணற்றில் மனித கழிவை கலந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இச்சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் குடிநீர் கிணற்றில் கலக்கப்பட்டது தேன் அடைதான் என தெரியவந்துள்ளது. இந்த தகவலை குடிநீர் வாரியப் பொறியாளர் மோகன் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த புகார் எழுந்த சமயத்தில் கிணற்றுக்குள் இறங்கி குடிநீர் வாரியப் பொறியாளர் ஆய்வு மேற்கொண்டதில் தேன் அடை என்பது தெரிய வந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.