ADVERTISEMENT

டேங்கர் லாரி மூலம் குடி தண்ணீர் விநியோகம்! திண்டுக்கல் கலெக்டர் அதிரடி உத்தரவு!!

10:04 AM Jul 04, 2019 | kalaimohan

திண்டுக்கல் மாவட்ட த்தில் உள்ள நகரம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் குடிநீர் வழங்குதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அதில் தற்பொழுது உள்ளூர் குடிநீர் ஆதரங்கள் வறண்டு போன நிலையில் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கிடைக்கப் பெறும் தண்ணீரைக் கொண்டு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டிய நிலை உள்ளது எனவே தேவைப்படும் குடியிருப்புகளுக்கு கூடுதலாக டேங்கர் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்திட வேண்டும். இப்படி டேங்கர் லாரி மூலம் குடிதண்ணீர் விநியோகம் செய்யும் பொழுது மேல்நிலைதொட்டி அல்லது சின்டெக்ஸ் தொட்டியில் ஏற்றி குளோரினேசன் செய்து குடிநீர் வழங்க வேண்டும்

ADVERTISEMENT


திண்டுக்கல் மாநகராட்சி, கொடைக்கானல், பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய நகராட்சிகளின் அதிகாரிகள் மற்றும் அனைத்து பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்மந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரியத்தினருடன் இணைந்து ஒவ்வொரு வாரமும் ஆய்வுக்கூட்டம் நடத்தி தண்ணீர் பற்றாக்குறையுள்ள குக்கிராமங்களுக்கு தேவையான அளவு தண்ணீர் வழங்க திட்டமிடல் வேண்டும்.

ADVERTISEMENT


மேலும் மாவட்டத்தில் உள்ள அந்தந்த பகுதிகளை சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் நகராட்சி ஆணையாளர்கள் மாநகராட்சி அலுவலர்கள் தங்களது பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் செய்யவும், அப்பகுதியில் குடிநீர் தேவைகள் குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அலுவலகங்களிலும் குடிநீர் தொடர்பான கட்டுப்பாடு அறை ஏற்படுத்தி குடிநீர் தொடர்பான புகார்களை பெற அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டும்.

அது குறித்து பொதுமக்கள் அறியும்வகையில் விரிவான விளம்பரம் செய்திட வேண்டும் மேலும் பெறப்படும் புகார்களை பதிவேடு பராமரித்து அதில் பதிவு செய்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர், மின்மோட்டார், பைப்லையன் பழுதுகளை உடனுக்குடன் சரி செய்து தங்கு தடையின்றி குடிநீர் வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT