வேலூர் மாவட்டம், இராணிப்பேட்டை பாரதிநகர் பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநராக இருப்பவர் 24 வயதான சுரேஷ். இவர் தனது நண்பர்களான சாய்கிருஷ்ணா, பாண்டியன், மோகன் ஆகிய நான்கு பேரையும் இன்னோவா காரில் ஏற்றிக்கொண்டு அக்டோபர் 9- ஆம் தேதி அதிகாலை ராணிப்பேட்டையில் இருந்து வாலாஜாப்பேட்டை அடுத்த சுங்கச்சாவடி நோக்கி சென்றுள்ளார்கள்.

Advertisment

வாலாஜா அருகே வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கார் சென்றுக்கொண்டு இருந்தபோது, அந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது மோதியதுடன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த விடியற்காலை நேரத்தில் அங்கிருந்த ஒரு சிலர் ஓடி வந்து உதவியுள்ளனர். மேலும் காருக்குள் சிக்கியவர்களை மீட்டுள்ளனர். மீட்கும் போது அவர்கள் அனைவரும் குடிபோதையில் இருந்தனர். கார் உரிமையாளரான சுரேஷ் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

drink and drive incident in vellore district

மற்ற மூன்று பேரையும் மீட்டு வாலாஜாப்பேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். விடிய விடிய குடித்துவிட்டு காரை தாறுமாறாக ஒட்டி மின் கம்பத்தில் கார் மோதி கவிழ்ந்ததில் ஒருவர் பலியானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

alt="drink and drive incident in vellore district " data-align="center" data-entity-type="file" data-entity-uuid="e83ac19d-4f9a-49d5-927f-fb97b1b75728" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500X300_46.jpg" />