ADVERTISEMENT

துளையிடும் பணி வேகமெடுத்தது... சென்னையிலிருந்து வருகிறது ''ஆகாஷ்'' ட்ரில் பிட்

08:52 AM Oct 28, 2019 | kalaimohan

திருச்சி மணப்பாறை அடுத்த நடுக்காட்டுபட்டியில் ஆள்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு முயற்சி எடுத்து வருகிறது.

தற்பொழுது நாற்பது அடியை கடந்து விட்ட பிறகும்கூட அங்கு கடினமாக பாறைதான் இருந்தது. அதிகாரப்பூர்வமாக நேற்று இரவு 38 அடி ஆழம் தோண்டியதாக தெரிவித்தார்கள். அதற்குப் பிறகு இரண்டாவது ரிக் இயந்திரம் வந்ததிலிருந்து ஆறு மணி நேரம் துளை போடும் பணியில் ஈடுபட்டு வருகிறது. தற்போது 40 அடி ஆழத்தை கடந்திருந்தாலும்கூட தொடர்ந்து அந்த பகுதியில் கடினமான பாறைதான் இருக்கிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

பாறையை தகர்க்க முடியாமல் ஊழியர்கள் துளையிடும் பகுதியில் தண்ணீரை ஊற்றி வரும் செயலில் ஈடுபட்டனர். மூன்று வகையான ட்ரில்லிங் டூல்களை அங்கே வைத்திருக்கிறார்கள். அவைகளை கொண்டு மாற்றி மாற்றி அந்தப் பாறையை ஓரளவு தகர்த்து அங்கிருந்து துகள்களாக வெளியே எடுத்து வர முயற்சி செய்துவந்த நிலையில் தற்போதைய அண்மை தகவலாக கடினமான பாறைகளால் தாமதப்படுத்தி வந்த தோண்டும் பணி தற்போது வேகம் எடுத்துள்ளது. கடினமான பாறை தன்மை குறைந்துள்ள நல்ல தகவல் வந்துள்ளது.

அதேபோல் கடினமாக உள்ள பாறை இனி இருந்தால் அதை உடைக்க சென்னையிலிருந்து ஆகாஷ் என்ற ஒரு புதிய ட்ரில் பிட் வருகிறது என்ற தகவலும் தற்போது கிடைத்துள்ளது. அதேபோல் துளையிட்ட பிறகு குழிக்குள் இறங்கி மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக 3 தீயணைப்பு வீரர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் கூடுதலாக 9 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT