Published on 18/11/2022 | Edited on 18/11/2022

கல்லூரி பேராசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு தொடர்பான நெறிமுறைகளை அறிவித்து, உயர் கல்வித் துறையிலிருந்து கல்லூரி கல்வி இயக்ககம், தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மற்றும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களில் பதிவாளர்களுக்குக் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் கல்லூரிகளில் பேராசிரியர்கள் அனைவரும் தங்களை மாணவர்களிடமிருந்து தனியாக வேறுபடுத்தித் தெரியும் விதமாகவும், தங்களது உடல் அமைப்பை மறைக்கும் விதமாகவும் மேலங்கி (ஓவர் கோட்) அணிய வேண்டும். பேராசிரியர்களுக்குள் ஏற்றத்தாழ்வை வெளிப்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமான ஆடைகளை அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.