









சென்னை கிறித்துவக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் 18 அக்டோபர் 2019 அன்று எம்.சி.சி. மேனிலைப்பள்ளியில் வர்ணோத்சவ் 2019 என்ற மாவட்ட அளவிலான ஓவியப்போட்டி நடைபெற்றது.
இயற்கை வளங்களை பாதுகாப்போம் எனும் கருப்பொருளில் நடைபெற்ற போட்டியில் பல்வேறு பள்ளிகளில் இருந்து வந்திருந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். அந்த மாணவர்களின் ஓவியங்கள், கழிவிலிருந்து கலை, காகிதத்திலிருந்து கலை பொருட்கள், காய்கறிகளிலிருந்து கலைப்பொருட்கள் மற்றும் வண்ணக்கோலங்கள் போன்ற போட்டிகளில் உற்சாகத்துடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிகொணர்ந்தனர்.
டான் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் முனைவர் மேரி ஜோஸ்பின் ராணி, எப்.எம்.ஏ. அவர்கள் பரிசளிப்பு விழாவில் தலைமேயேற்று வெற்றிப் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கினார். பள்ளியின் தலைமையாசிரியர் ஜி.ஜெ.மனோகர், ஓவிய ஆசிரியர்கள் கிறிஸ்டி, ஏ.எஸ்.ஜோசப் சாமுவேல் ஆகியோர் ஓவியப் போட்டியினை ஒருங்கிணைத்து நடத்தினர்.