Advertisment

அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கட்சியினர்!

The Dravidians paid homage to the Erode Anna statue by wearing garlands ...

பேரறிஞர் அண்ணாவின் 52வது நினைவு நாளையொட்டி தமிழகம் முழுக்க உள்ளபல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும்அமைப்புகள் சார்பில் அண்ணாவின் சிலைக்குமாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Advertisment

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அண்ணாசிலைக்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமையில்கட்சியின் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக ஈரோடு வீரப்பன்சத்திரம், கொடுமுடி வடக்கு, மேற்கு ஒன்றியம் உள்ளிட்ட 14 இடங்களில்தி.மு.க.சார்பில் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Advertisment

நிகழ்ச்சியில், மாநில நிர்வாகிகள் எஸ்.எல்.டி.சச்சிதானந்தம், வி.சி.சந்திரகுமார், குறிஞ்சி சிவக்குமார், மாவட்ட நிர்வாகிகள் குமார் முருகேஷ், செந்தில்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதைப் போலவே ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், அண்ணா நினைவு நாளையொட்டி பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள அவரது சிலைக்கு மாவட்ட அவைத் தலைவர் பிசி ராமசாமி தலைமையில், நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம் துணைமேயர் கே.சி.பழனிச்சாமி, பகுதிச் செயலாளர் மனோகரன், ஜெகதீஸ்வரி, தங்கமுத்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வகுமார சின்னையன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

anna statue tribute paid admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe