தேனியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கம்பத்தில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆதரவு பொதுக் கூட்டமும், போடியில் பேரணியுடன் கூடிய தெருமுனை பிரச்சாரமும் நடந்தது.இதில்பாஜகதேசியசெயலாளர்எச்.ராஜா கலந்துகொண்டு பேசினார். அதன்பின் பெரியகுளத்தில் மாலை மாபெரும் பொதுக்கூட்டமும் நடந்தது.

Dravidian parties try to make Tamil Nadu a riot... H. Raja speech

Advertisment

பெரியகுளம் பொதுக் கூட்டத்தில் பேசியஎச்.ராஜா, திராவிட கட்சிகள் தமிழகத்தை கலவர பூமியாக மாற்றி வருவதாக குற்றம் சாட்டினார். மேலும் பேசுகையில்,இந்தியாவில் இந்துக்கள் அதிகமாக இருப்பதால்தான் இந்தியா மதசார்பற்ற நாடாக இருப்பதாகவும், ஈழத்தமிழர்களுக்கு என்றுமே பாஜக உறுதுணையாக தான் இருந்துள்ளது என்றும்,மக்களின் ஆதரவு பிரதமர் மோடிக்கு இருப்பதால் தான் 353 எம்.பி.க்களுடன் மறுபடியும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார் என்று கூறினார்.

இக்கூட்டத்திற்கு வரவேற்புரையை பெரியகுளம் நகர் மண்டல தலைவர் முருகனும், தலைமையுரையை மாவட்ட தலைவர் வெங்கடேஸ்வரணும்,வாழ்த்துரையை மாவட்ட ஊராட்சிமன்றக்குழு துணைதலைவர் ராஜபாண்டியன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமாரும்வழங்கினார்கள்.

Advertisment