திராவிடம் தான் எனது அடையாளம் என அமைச்சர் எ.வ.வேலு பேசியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மாடூர் சுங்கச்சாவடி பகுதி அருகே தனியார் திருமண மண்டபம் ஒன்றில் இந்திய முதுநிலை பொது மருத்துவர்கள் சங்கம் சார்பாக மாநில அளவிலான கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எவ.வேலு கலந்து கொண்டார்.
பங்குபெற்ற பலருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் மடல்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து இந்த நிகழ்வின் மேடையில் பேசிய அமைச்சர் எவ.வேலு, ''தாய்மொழியாக தமிழும், இணைப்பு மொழியாக ஆங்கிலமும் கற்றால் போதும் என்ற நிலையை உருவாக்கித் தந்தவர் தந்தை பெரியார், அண்ணா அவர்கள். அவர்கள் வளர்த்த திராவிடம் தான் எனது அடையாளம். நான் அரசியல் பேசவில்லை'' என்றார்.