Advertisment

திராவிடர் கழக இளைஞர் அணி எழுச்சி மாநாடு 

Dravidar Kazhagam

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் திராவிடர் கழக இளைஞரணி எழுச்சி மாநாடு கடந்த ஆறாம் தேதி நடைபெற்றது. கருஞ்சட்டை தோழர்களும் தோழிகளும் பெரும் படையாக வருகை தந்தனர். பஸ் நிலையம் அருகே நடைபெற்ற மாநாட்டில் பெண்களுக்கான தற்காப்பு கலைகள், சிலம்பம், மல்யுத்தம், பறை இசைக் கலை என தமிழர்களின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பறைசாற்றும் விதமாக நிகழ்ச்சிகளை அமர்க்களப் படுத்தினார்கள்.

Advertisment

மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களுக்கு அவரது உடல் எடைக்கு எடை நாணயம் வழங்கப்பட்டது (ஒரு லட்சத்தி நாற்பத்தி ஐந்தாயிரம் ரூபாய்) அவரது எடை அளவுக்கு 240 கைத்தறிலுங்கிகள் வழங்கப்பட்டன. அந்த லுங்கிகளை விழாவுக்கு வருகை தந்திருந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் 48 ஆயிரம் ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கிக் கொண்டார். அந்த லுங்கிகளை குறிஞ்சிப்பாடியில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு வழங்குவதாக வேல்முருகன் தெரிவித்தார். விழாவில் அதிக அளவில் இளைஞர்கள் இளம்பெண்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

Advertisment

team Youth Dravidar Kazhagam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe