Advertisment

திராவிடர் கழக மாநில பொருளாளர் பிறைநுதல் செல்வி விபத்தில் மரணம்!!

திராவிடர் கழக மாநிலப் பொருளாளராக இருந்தவர் டாகடர் பிறைநுதல் செல்வி .72 வயதான இவர் தன் கணவர் கவுதமனுடன் குன்னூரில் வசித்து வந்தார் .இவர் திராவிட கழகத் தலைவர் கி.வீரமணியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு திருப்பூருக்கு வந்தார் , பின்னர் அங்கிருந்து காரில் குன்னூருக்கு வந்து கொண்டிருந்த பிறைநுதல் செல்வியின் கார் மீது காட்டேரிப் பகுதியில் எதிரே வேகமாய் வந்த கார் ஒன்று மோதியது .

Advertisment

Dravidar Kazhagam State Treasurer's Death

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

மோதிய வேகத்தில் காரில் பிறைநுதல் செல்வி அணிந்திருந்த சீட் பெல்ட் கொக்கி அவரது வயிற்றில் குத்த காயம் ஏற்பட்டது. பின்னர் குன்னூர் தனியார் ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்[பட்டது . ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் . பிறைநுதல் செல்விக்கு இனியன் என்ற மகனும் , யாழிசை என்ற மகளும் இருக்கின்றனர்.

.

ஈரோட்டைச் சேர்ந்த இவர் 22 ஆண்டு காலம் குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு மருத்துவராகவும், கோத்தகிரி தலைமை ஆஸ்பத்திரியில் தலைமை டாக்டராகவும் , மாவட்ட சுகாதார இணை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் பிறைநுதல் செல்வி .

அவரது உடல் குன்னூர் ரெய்லி காம்பவுண்ட் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப் பட்டிருக்கிறது .

death pirainoothalselvi tk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe