Advertisment

"ஆதரவா பேசுறவங்க எல்லாம்..." கவுதம் வாசுதேவ் மேனனை விமர்சித்த திரௌபதி இயக்குனர் மோகன்.ஜி!

mohan

Advertisment

2010ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மற்றும் த்ரிஷா உள்ளிட்டோர் நடித்து வெளியாகி செம ஹிட் அடித்த படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. இந்தப் படத்தில் வரும் கார்த்திக், ஜெஸ்ஸி, அவர்களுக்குள்ளே நடக்கும் தொலைபேசி உரையாடல் வைத்து 'கார்த்திக் டயல் செய்த எண்' என்ற குறும்படத்தை கெளதம் மேனன் இயக்கிய வெளியிட்டிருந்தார். 12 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தக் குறும்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் திரௌபதி இயக்குனர் மோகன்.ஜி கவுதம் மேனன் எடுத்த குறும்படத்தை விமர்சனம் செத்துள்ளார். அதில், நிறைய இளைஞர்கள் உங்கள் படத்தைப் பின்பற்றுகிறார்கள். அவர்களிடம் விஷத்தைக் கலக்க முயற்சி செய்யாதீர்கள் என்றும், இந்த ஆதரவாபேசுற போரளிகள் எதிர்காலத்தில் பெரிய தியாகிகள்.. கவரிமான் ராஜா வம்சத்தைச் சேர்ந்தவர்கள்.. என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் சமீபத்தில் இந்தக் குறும்படம் குறித்து கவுதம் மேனன் பேசும் போது, இந்தப் படம் எடுத்தது நீங்களும் உங்கள் முன்னாள் காதலியை அழைத்துப் பேசுங்கள் என்று சொல்வதற்காக அல்ல. இது ஜெஸ்ஸி - கார்த்திக்கின் கதை. அவ்வளவுதான். எனக்கு உண்மையில் கலவையான விமர்சனங்கள் பற்றி கவலை இல்லை. ஒரு சிலர்தான் இப்படத்தை வசை பாடுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

Speech director cinema draupathi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe