குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள நிலையில் அதற்கானமுன்னெடுப்புகளைகுடியரசுதலைவர் வேட்பாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிவேட்பாளராகதிரௌபதிமுர்முஅறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராகயஷ்வந்த்சின்ஹாஅறிவிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

யஷ்வந்த்சின்ஹாநேற்று முன்தினம் தமிழகம் வந்திருந்த நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரான திரௌபதிமுர்முஇன்று தமிழகம் வருகை புரிந்துள்ளார். சென்னை வந்துள்ள திரௌபதிமுர்முநுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பாஜக கூட்டணிக்கட்சிதலைவர்களைசந்திக்க இருக்கிறார். இதற்காக நேற்றே அதிமுகவின்ஓபிஎஸ்,இபிஎஸ்ஆகியோருக்குதமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அழைப்புவிடுத்திருந்த நிலையில் தற்பொழுது நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்குஇபிஎஸ்மட்டும் அவரது ஆதரவாளர்கள் உடன்ஓபிஎஸ்இன்னும் வரவில்லை. இருப்பினும் திரௌபதிமுர்முவைஓபிஎஸ்,இபிஎஸ்தரப்புதனித்தனியாகசந்திக்கும் என்று கூறப்படுகிறது. அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன்உசேன், ஜெயக்குமார், செங்கோட்டையன், விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் முதலில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களைச் சந்திக்கும் திரௌபதிமுர்மு, அதற்கடுத்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அதற்கடுத்துஓபிஎஸ்மற்றும் அவரது ஆதரவாளர்கள், அடுத்து தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் இப்படி பல்வேறுகட்டங்களாககூட்டணிக்கட்சிதலைவர்களைதிரௌபதிமுர்முசந்திக்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாகதகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment