Advertisment

ஈரோடு மாவட்டத்தில் இரண்டு நாள்  நாடக பயிற்சி முகாம்! 

Drama training camp held in Erode district!

Advertisment

தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம் நடத்தும் இரண்டு நாட்கள் நாடகப் பயிலரங்கு ஈரோடு மாவட்டம் கோபி தியாகசீலர் சி.எஸ். சுப்ரமணியம் மார்க்சீயக் கல்வி நிலையத்தில் சனிக்கிழமை காலை தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெற்றது.பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கே. கங்கா, பொதுச் செயலாளர் மரு.த. அறம், பொருளாளர் ப.பா. ரமணி மற்றும் மாநிலப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 60 பேர் பங்கேற்றுள்ளனர். மார்க்சீயக் கல்வி நிலையத்தின் முதல்வர் ம. செல்வராஜ் வாழ்த்திப் பேசினார்.

நாடகவியலாளர்கள் பேரா. த. திலிப்குமார், கோவை நந்தகிஷோர், ஓவியர் எ.ஜெ.செல்வின், நாட்டுப்புற இசைக் கலைஞர் புதுவை மு.ஆதிராமன், சென்னை ச. சங்கரநாராயணன், கோவை எல். ஜான் ஒருங்கிணைப்பில் நாடகப் பயிற்சிகள் தொடர்ந்து நடைபெற்றது.கடுமையான பயிற்சிகளை திலீப் குமார் பங்கேற்பாளர்களுக்கு அளித்தார். அண்டனூர் சுராவின் சிறுகதை மையமாக வைத்த நடிக்கப்பட்ட பசி நாடகத்தை திரை வடிவில் காட்டினார்கள். அந்த கதையிலிருந்து வேறுபட்டு ஆரம்பத்தில் போர் சூழலை விவரிக்கும் ஒரு காட்சியும் பின்னால் பசி சார்ந்த நான்சி கோமகன் அவர்களுடைய தனிநடனமும் இந்த திரைப்படத்திற்கு ஒரு புது வடிவம் கொடுத்தது எதார்த்த வடிவத்தில் இருந்து மாறுபட்டு இன்னொரு பரிமாணத்தை தந்தது.

இரவு பராரி திரைப்படம் திரையிடப்பட்டது அதன் இயக்குநர் எழில் வேம்படி கலைஇலக்கியப் பெருமன்றத்தின் மாவட்ட செயலாளராக திருவண்ணாமலையில் பணிபுரிந்து இருக்கிறார். அவரின் படம் தமிழர்களுடைய வாழ்வில் இடம்பெயர்ந்து வாழும் தங்களுடைய சிக்கல்கள் கன்னட மக்கள் மத்தியில் வாழ்கிற போது ஏற்படுகிற வன்முறை பகை இவற்றை காதல் வாழ்க்கையோடு சிறப்பாக தந்திருக்கிறார் சில விருதுகளை பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

drama Erode workshop
இதையும் படியுங்கள்
Subscribe