Advertisment

தொடக்கத்தில் எம்.பி... முடிவில் போலீஸ்..! தென்னிந்திய மக்கள் நாடக திருவிழாவில் தமிழச்சி தங்கபாண்டியன். (படங்கள்)

Advertisment

நாடக கலைஞர்களையும், மேடை நாடகங்களையும் ஊக்குவிக்கும் முயற்சியாக சென்னையில் முதல் முறையாக பிரம்மாண்ட தென்னொந்திய நாடகத் திருவிழா நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் கேரள சமாஜம் இணைந்து நடத்தும் இந்த நாடகத் திருவிழாவில் தென்னிந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 500 நாடக கலைஞர்கள் பங்கேற்றனர். அக்டோபர் 2ம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற்ற இந்த நாடகத் திருவிழா அக்டோபர் 6 ஆம் தேதி முடிவடைந்தது. சென்னையில் உள்ள கேரள சமாஜாம் வளாகத்தில் நடைபெற்ற இதன் நிறைவு விழாவில் மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும், பல்வேறு நாடகம் மற்றும் இலக்கிய ஆளுமைகளும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். விழாவின் முடிவில் எழுத்தாளர் இமயம் எழுதிய போலீஸ் என்ற சிறுகதையும், ஜெயமோகன் எழுதிய கைதி சிறுகதையும் நாடக வடிவில் அறங்கேற்றப்பட்டன. நிறைவு விழா எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் துவங்கியதும், போலீஸ் நாடகத்துடன் முடிவடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

tamilcinema drama Thamizhachi Thangapandian
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe