Advertisment

வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

Draft voter list release today

தமிழக வரைவு வாக்காளர் பட்டியலை தலைமைத் தேர்தல் அதிகாரி இன்று வெளியிடுகிறார்.

Advertisment

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹூ அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டத்தை நேற்று முன்தினம் (25.10.2023) நடத்தினார். இந்தக் கூட்டத்தில், அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் போது படிவங்களின் தீர்வு மேற்கொள்ளுதல் மற்றும் அதன் அட்டவணை குறித்து தெரிவிக்கப்பட்டது. மேலும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 27 ஆம் தேதி (27.10.2023) வெளியிடப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் தமிழக வரைவு வாக்காளர் பட்டியலை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாஹூ இன்று காலை வெளியிடுகிறார். இதன் மூலம் வாக்காளர் பட்டியலில் இன்று முதல் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் இதற்கான இறுதி வாக்காளர் பட்டியல் 05.01.2024 அன்று வெளியிடப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe