Draft of State Education Policy ready

Advertisment

மாநில கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

580 பக்கங்கள் கொண்ட தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை வரைவு தயாராக உள்ளதாக மாநில கல்விக் கொள்கை குழு தகவல் வெளியிட்டுள்ளது. ஓய்வுபெற்ற டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு மாநில கல்விக் கொள்கையை தயாரித்துள்ளது. நான்கு பேர் கொண்ட குழு மொழிபெயர்ப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. 180 பக்கமுள்ள பரிந்துரைகள் மற்றும் 400 பக்கங்களைக்கொண்ட விரிவான அறிக்கையை மொழிபெயர்க்கும் பணி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. குழப்பம் ஏற்படாமல் பரிந்துரைகளை சரியாக மொழிபெயர்க்கும் பணி நடந்து வருவதாக மாநில கல்விக் கொள்கை குழு தகவல் வெளியிட்டுள்ளது.