Skip to main content

வித்தியாசமான வரதட்சனை கேட்ட ஐஏஎஸ் அதிகாரி... ஆச்சரியமடைந்த பெண் வீட்டார்..!

Published on 29/02/2020 | Edited on 29/02/2020

 

அந்த திருமணத்தில் பங்கேற்ற சக அதிகாரிகளும், உற்றார் உறவுகளும் ஆட்சியரை மனதார வாழ்த்தி மகிழ்ந்தனர். அவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஐஏஎஸ் தேர்வு ஆனபோது கூட பெற்றோரும், உற்றோரும் இந்த மகிழ்ச்சி அடையவில்லை. எத்தனையோ வரன்கள் வந்தும், சேவை செய்யும் மருத்துவர் தான் வேண்டும் என அடம்பிடித்து, திருமணம் முடித்ததை கண்டு அக மகிழ்ந்து போனார்கள்.

 

Wedding




ஆம்...நெல்லையில் பயிற்சி ஆட்சியராக பணியாற்றும் சிவகுரு பிரபாகரன். இப்போது, டாக்டர்.கிருஷ்ணபாரதியை கரம் பிடித்துள்ளார். இவர்களது திருமணம் கடந்த 26-ந்தேதி பேராவூரணியில் நடைபெற்றது.

 

திருமணத்திற்கு முன்னதாக மணப்பெண் வீட்டாரிடம் வரதட்சனை என்ற அடிப்படையில் விதித்த நிபந்தனை. திருமணத்திற்கு பிறகு வாரத்தில் 2 முறை, "நான் பிறந்த ஒட்டங்காடு (தஞ்சை மாவட்டம்) கிராமத்தை சுற்றியிருக்கும் கிராமத்தில் இலவச மருத்துவம் பார்க்க வேண்டும்" என்ற நிபந்தனை தான். அவரது இந்த வித்தியாசமான சமூக சிந்தனைக்கு பெண் வீட்டாரும் மகிழ்வோடு ஏற்று உள்ளனர். 


 

அடிப்படையில் ஏழ்மை குடும்பத்தில் பிறந்த அவர், பொறியியல் படிப்பை முடித்தபிறகு, சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி 2018-ல் ஐஏஎஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 101-வது இடத்தையும், தமிழக அளவில் 3-வது இடத்தையும் பிடித்தார்.
 

விதை நெல்லை விற்று படித்தவர்::
 

தற்போது நெல்லை மாவட்ட உதவி ஆட்சியராக (பயிற்சி) பணியாற்றும் சிவகுரு பிரபாகரன். அடிப்படையில் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர். தாய்-தந்தையார் ஆடு, மாடு மேய்த்து அதில் கிடைத்த வருமானத்தில் படிக்க வைத்தனர். விதை நெல்லை விற்று அதில் கிடைத்த ரூ.32 ஆயிரத்தை முதல் வருட கட்டணமாக செலுத்திய பிரபாகரனுக்கு, பொறியியல் படிப்பு அவசியம் தானா? என்ற கேள்வியும் எழுந்தது.
 

இருந்தாலும் நண்பர்கள் உதவியுடன் பொறியியல் முடித்த பிறகு, ஐஐடியில் எம்.டெக் முடித்த சிவகுரு பிரபாகரனுக்கு, ஐஏஎஸ் ஆவது மட்டுமே இலக்காக இருந்தது. இதனால், பிற துறைகளில் கிடைத்த வேலை வாய்ப்புகளை இழந்தார்.


 

கல்லூரியில் படிக்கும் காலத்திலும், சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாரான போதும் செல்போன் ரீ-சார்ஜ் கடையில் பகுதிநேர ஊழியராக வேலை பார்த்த அவர், விடா முயற்சியுடன் படித்தார். 2018-ல் ஐஏஎஸ் ஆனார். அதாவது 4-வது முயற்சியில் வெற்றி அவர் வசமானது.
 

அகல உழுதலும், பின் ஆழ உழுவதும் உத்தமம் என்ற தெளிவு அவசியம் என்பதை உணர்ந்திருந்தார் சிவகுரு பிரபாகரன். இப்போதும் அதை தக்க வைத்திருக்கிறார். வாழ்த்துகள் சார்..!
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ள நிவாரணப் பணிகள்; மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
Flood Relief Works Appointment of Senior IAS Officers

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையின் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு அருகில் உள்ள பள்ளிகள் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் உருவாக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைத்தல். சமுதாய சமையல் அறைகள் அமைத்து இதர பகுதிகளில் இருந்து வரப்பெறும் உணவு பொட்டலங்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக இந்திய ஆட்சிப் பணியில் மூத்த அலுவலர்கள் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் டி. கார்த்திகேயன் - மாப்பிள்ளையூரணி ஊராட்சி, தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளுக்கும்; சிறப்பு திட்டச் செயலாக்கத்துறை செயலாளர் தரேஸ் அகமது ஏரல் - ஆவரங்காடு, இடையர்காடு, சிறுதொண்டாநல்லூர், ஆறுமுகமங்கலம், மாங்கோட்டகுப்பம், சம்படி மற்றும் சம்படி காலனி பகுதிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். பெருநகர போக்குவரத்துக் கழகம் சென்னை லிமிடெட் மேலாண்மை இயக்குநர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் - கீழமங்கலகுறிச்சி, அகரம், மஞ்சள்நீர்காயல், கொற்கை, உமரிக்காடு, மேல மங்கலக்குறிச்சி, பழையகாயல், முக்காணி பகுதிக்கும்; ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குநர் பொன்னையா ஸ்ரீவைகுண்டம் - ஆழ்வார்திருநகரி மற்றும் கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று பதிவுத்துறைத் தலைவர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் - ஆழ்வார்திருநகரி பேரூராட்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கும்; பேரூராட்சிகள் இயக்குநர் கிரண் குராலா - வரதராஜபுரம், சிவராம மங்கலம், அப்பன் திருப்பதி, குலசேகர நத்தம், சாமி ஊத்து, ஆழ்வார்தோப்பு, கோவங்காடு தெற்கு, கோட்டைக்காடு பகுதிக்கும்; நகராட்சி நிர்வாகம் இயக்குநர் சிவராசு - திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் வட்டத்திற்கும்; வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையர் பிரகாஷ் - வாழவல்லான், ஆழ்வார்திருநகரி, அழகியமணவாளபுரம், செம்பூர், புன்னக்காயல், சூழவாய்க்கால். மேல ஆத்தூர், திருப்புளியங்குடி, சின்னநட்டாத்தி பகுதிக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Flood Relief Works Appointment of Senior IAS Officers

இவர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்தல், சுகாதாரத் துறையின் மூலம் மருத்துவ முகாம்கள் நடத்துதல், இறந்த விலங்குகளின் உடல்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தல், துண்டிக்கப்பட்ட மின்சார வசதியை வழங்க நடவடிக்கை எடுத்தல், முழுவதுமாக துண்டிக்கப்பட்ட பகுதிகள் ஏதேனும் இருப்பின் அப்பகுதிகளுக்குத் தொடர்பு ஏற்படுத்துதல், பாதிக்கப்பட்ட சாலைகளை புரனமைக்க நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வார்கள் என இதற்கான உத்தரவை கூடுதல் தலைமைச் செயலரும், வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையருமான எஸ்.கே. பிரபாகர் பிறப்பித்துள்ளார். 

Next Story

‘நா... படிக்கணும் என்ன விட்றுங்க...’- தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் எடுத்த முடிவு 

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
  bride refused to marry while tying the thali

தாலி கட்டும் நேரத்தில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த மணப்பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. 

கர்நாடக மாநிலம் சிக்கப்யலாடகெரே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் திப்பரெட்டிகலியே பகுதியைச் சேர்ந்த யமுனாவிற்கும் பெற்றோர்கள் திருமணம் செய்ய முடிவு செய்து, கடந்த மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த 7 ஆம் தேதி இருவருக்கும் சிக்கப்யலாடகெரேவில் திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில், மணமேடையில் மணமகன் தாலி கட்ட முயன்றபோது, திடீரென எனக்கு கல்யாணம் வேண்டாம் என்று மணமகள் கூறியுள்ளார். ஆனால் அவரது பெற்றோர் பெண்ணை சமாதானம் செய்து திருமணத்தை நடத்த முயன்றபோது, பெண் பிடிவாதமாக எனக்கு திருமணம் வேண்டாம் நான் படிக்கணும் என்று கூறி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

மணப்பெண் திருமணத்திற்கு முதலில் சம்மதம் தெரிவித்துள்ளார். பின்பு அவருக்கு திருமணம் நடக்கவிருந்த ஒரு வாரத்திற்கு முன்பு அரசுக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படிக்க கல்லூரியில் சீட் கிடைத்ததால், தனது பெற்றோரிடம் தான் படிக்க வேண்டும் என்று கூறி திருமணத்தை நிறுத்துமாறு கூறியுள்ளார். ஆனால் அவர்கள் மணப்பெண்ணின் பேச்சை கேட்காமல் திருமணத்தை நடத்தவிருந்ததாகவும், அதனால்தான் தாலி கட்ட மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது.