Dowry is horrible! Police investigation!

திருச்சி, திருவெறும்பூர் நவல்பட்டு அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் இராணுவ வீரரான ஸ்டீபன். இவர், தற்போது துப்பாக்கி தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் பாதுகாப்பு அலுவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 2010ஆம் ஆண்டு சக்தா தேவி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து முடிந்தது.

Advertisment

இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையில் கடந்த 2010ஆம் ஆண்டு ஜாஸ்மின் பானு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லாததால் ஸ்டீபன் மற்றும் அவரது தாயார் இருவரும் சோ்ந்து ஜாஸ்மீன் பானுவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளனர். இதனால் மனமுடைந்த ஜாஸ்மின் பானு திருவெறும்பூர் அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Advertisment