Advertisment

வரதட்சனை கொடுமை! பெண்ணின் கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை!!

Dowry horrible! Husband jailed for 10 years!

Advertisment

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வி.எஸ்.பி. நகரைச் சேர்ந்த பழனி என்பவரது மகன் வினோத்குமார்(30). எலக்ட்ரீசியனான இவருக்கும் குறிஞ்சிப்பாடி அடுத்த கல்குணம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகள் சூர்யா(21) என்பவருக்கும் கடந்த 30.01.2007 அன்று திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின்போது சூர்யாவின் பெற்றோர் 20 சவரன் நகை, ரூபாய் 2.50 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுத்துள்ளனர். திருமணமாகி ஆறு மாதத்தில் வினோத்குமாரின் சகோதரி வித்யா வீடுகட்டும் செலவிற்காக குடும்பத்தினர் சூர்யாவிற்கு தெரியாமல் அவரது நகைகளை அடமானம் வைத்தனர். இதுகுறித்து சூர்யா கேட்டதால் கணவர் வினோத்குமார், மாமனார் பழனி, மாமியார் ராஜேஸ்வரி, கணவரின் சகோதரி ஆகியோர் சூர்யாவை தாக்கினர். மேலும் இந்த விரோதத்தில் சூர்யாவிற்கு குழந்தை இல்லை என திட்டி வாழைப்பழத்தில் 'புள்ளைபூச்சி'யை வைத்து வலுக்கட்டாயமாக கொடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த சூர்யா 06.04.2018 அன்று கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்று, பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். பின்னர் சூர்யாவின் பெற்றோர் வீட்டில் கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி வினோத்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் சூர்யாவை கொடுமைப்படுத்தியுள்ளனர். அதையடுத்து தனது வீட்டிற்கு சென்று 4 சவரன் நகை வாங்கி வந்து கொடுத்த பிறகும் சூர்யாவை துன்புறுத்தி வீட்டை விட்டு துரத்தி உள்ளனர். தொடர்ந்து கொடுமைகள் அதிகரித்ததால் 09.08.2018 அன்று சூர்யா மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் சூர்யா- வினோத்குமாரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

ஆனாலும் கொடுமை தொடர்ந்ததால் விரக்தியடைந்த சூர்யா 14.08.2018 அன்று மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதையடுத்து சூர்யாவின் அண்ணன் சிவக்குமார் தனது தங்கை சாவில் சந்தேகம் இருப்பதாக பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Advertisment

Dowry horrible! Husband jailed for 10 years!

விசாரணையில் வரதட்சணை கொடுமையால் தான் சூர்யா தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்தது. அதையடுத்து சூர்யாவின் கணவர் வினோத்குமார், அவரது தந்தை பழனி(50), தாய் ராஜேஸ்வரி(45, சகோதரி வித்யா(36) ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.

அவர்கள் மீது கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அரசு வழக்கறிஞர் செல்வபிரியா ஆஜராகி வழக்கு நடத்தினார். சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி பாலகிருஷ்ணன் நேற்று தீர்ப்பு கூறினார். அதில், சூர்யாவின் கணவர் வினோத்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பழனி, ராஜேஸ்வரிக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், வித்யாவுக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அத்துடன் 4 பேருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Cuddalore
இதையும் படியுங்கள்
Subscribe