Advertisment

வரதட்சணை கொடுமை என புகார்.. போலீஸார் விசாரணை!

Dowry horrible case coimbatore

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக ராசிக்கற்கள் விற்பனைசெய்யும் ஜோதிடரின் குடும்பத்தினர் மீது எப்ஐஆர் பதிவு.

Advertisment

கோவையில் காந்திபுரம் டாடாபாத் 7வது வீதியில் ஜோதிடர் கல்பனா என்பவருக்கு சொந்தமான பஞ்சரத்னா ஜெம்ஸ் என்ற பெயரில் ராசி கற்கள் விற்பனை செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

Advertisment

இந்த நிலையில் இந்நிறுவனம் செயல்பட்டு வரும் வீதி உட்பட பல்வேறு இடங்களில் ‘மக்கள் கவனத்திற்கு’ என பெரிய எழுத்துகளில் அச்சிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

போஸ்டரில் ஜோதிடர் கல்பனாவுக்கு சொந்தமான பஞ்சரத்னா ஜெம்ஸ் பெயர் முகவரியுடன் ஜோதிடர் கல்பனா அவரது கணவர் ஸ்ரீகாந்த் மகன் ரித்தீஸ் ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக எஃப்.ஐ‌.ஆர் (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

நகரின் பல்வேறு இடங்களில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமாக போஸ்டர் அடித்தவர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.

Coimbatore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe