Dowry cruelty; Family cut's a woman's hair

Advertisment

திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியைச் சேர்ந்த பாரத் (34), சமயபுரம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் அலுவலகப் பணியாளராக பணியாற்றிவருகிறார். இவருக்கும் சந்தியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

கடந்த இரண்டு வருட காலமாக சந்தியாவிடம் வரதட்சணை கேட்டு கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் தொடர்ந்து பல கொடுமைகளை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று (03.10.2021) சந்தியாவின் தலைமுடியை அரிவாளால் அறுத்தெடுத்திருக்கின்றனர். இதில் காயமடைந்த சந்தியா, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் லால்குடி மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து பாரத்தை கைது செய்தனர். தலைமறைவான பாரத்தின் பெற்றோரைத் தேடிவருகின்றனர்.