
செங்கல்பட்டில் அறுந்து கிடந்த மின் கம்பியை கம்பி மீது விழுந்ததில் தந்தையும் மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் வடகடம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கோதண்டம். இவர் தனது பத்து வயது மகனுடன் இருசக்கர வாகனத்தில் மாமல்லபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். வயல் பாதை வழியாக சென்று கொண்டிருந்த பொழுது வழியில் உயர் மின்னழுத்த கம்பியானது அறுந்து கிடந்தது. இதனைப் பார்த்த அதிர்ச்சியடைந்த கோதண்டம் சென்ற வேகத்தில் திடீரென பிரேக் போட முயன்றுள்ளார். அப்பொழுது நிலை தடுமாறி தந்தையும் 10 வயது மகனான சிறுவனும் கம்பி மேலே விழுந்தனர். இதில் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். அங்கு பெய்த மழை காரணமாக மின் கம்பி அறுந்து விழுந்த நிலையில் தந்தையும் மகனும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.