Advertisment

தப்பியோடிய ரவுடிக்கு இரண்டு காலுக்கும் மாவுக்கட்டு

Dough for both legs of the fleeing raider

மதுரையில் போலீசார் துரத்தியபோது ஓடிய ரவுடி பாலத்தில் இருந்து கீழே குதித்த போது கால் முறிந்த நிலையில் கைது செய்யப்பட்டு, அவருக்கு மாவு கட்டு போடப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisment

மதுரை தத்தனேரியில் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்த வினோத்குமார் என்ற நபர் கடந்த எட்டாம் தேதி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளியை தேடி வந்தனர். இந்த கொலையில் ரவுடி வினோத்குமார் என்பவரை போலீசார் தேடி வந்தனர். நெல்லை மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற தனிப்படையினர் அவரை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து மறைத்து வைத்திருந்த கத்திகளை வினோத்குமார் போலீசாரிடம் எடுத்துக் கொடுத்தார்.

Advertisment

அப்போது திடீரென போலீசார் பிடியில் இருந்து தப்பிக்கலாம்என்றுவினோத்குமார் ஓடிய போது அங்கு இருந்த பாலத்தில் இருந்து கீழே குதிக்க முயன்றுள்ளார். அப்போது இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட ரவுடி வினோத்குமார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

police rowdy madurai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe