/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/SIREN-ART_38.jpg)
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வட்டம் பட்டாபிராம் அடுத்துள்ள ஆயில் சேரி என்ற பகுதியைச் சேர்ந்தவர் ரெட்டை மலை சீனிவாசன். பிரபல ரவுடியும், சரித்திர பதிவேடு குற்றவாளியுமான இவரும், அவரது சகோதரர் ஸ்டாலின் ஆகிய இருவரும் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். பட்டாபிராம் பகுதியில் அண்ணன், தம்பி ஆகிய இருவரும் ஓட ஓட சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இட்டை மலை சீனிவாசனிடம் தருண், சாலமன், இளங்கோ, ஜோகன், மாதேஷ் அடங்கிய கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின்னர் இருவரையும் கொலை செய்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இரட்டை கொலை குறித்து காவல்துறையினர் கொலையாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)