Advertisment

பழிக்குப் பழியாய் இரட்டைக் கொலைகள்! ராமநாதபுரத்தில் பதற்றம்

rm

Advertisment

மே மாதம் நடந்த இரட்டை கொலை தொடர்பாக பழிக்குப்பழி வாங்க மீண்டும் ராமநாதபுரத்தில் இன்று இரட்டை கொலை நடந்திருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை கிராமத்தில் கடந்த மே மாதம் 20ஆம் தேதி காதணி விழா நடைபெற்ற வீட்டுக்குள் இரவு தூங்கிக் கொண்டிருந்த விஜயன், பூமிநாதன் மற்றும் விஜய் ஆகியோரை ஒரு கும்பல் வீடு புகுந்து பயங்கர ஆயுதங்கள் கொண்டு தாக்கியதில் விஜயன், பூமிநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த விஜய் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

rm

Advertisment

இந்த சம்பவம் தொடர்பாக கார்த்திக் உட்பட 20 பேரை போலீசார் பிடித்து அவர்கள் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் நீதிமன்றத்தில் குண்டாஸ் தள்ளுபடியாகிய நிலையில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வந்த கார்த்திக் மற்றும் விக்கி ஆகிய இருவரையும் மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசி நிலைகுலைய வைத்து பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்தனர்.

rm

இதனையடுத்து போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு சென்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இச்சம்பவத்தால் ராமநாதபுரம் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் இராமநாதபுரத்தின் முக்கிய இடங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

rmm

இது இப்படியிருக்க, இந்தக் கொலை சம்பந்தமாக தங்களைப் போலீசார் தேடுவதாக நயினார்கோவில் காவல் நிலையத்தில் ஐவர் சரணடைந்துள்ளனர்.

கடந்த மே மாதம் நடந்த இரண்டு கொலைக்கு பழிதீர்க்கும் விதமாக இக்கொலை நடந்திருக்கலாம் என தெரியவருகிறது.

Ramanathapuram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe