Skip to main content

சிறுமியை கடத்தி கொன்றவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

Published on 27/04/2019 | Edited on 27/04/2019

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள எம்.ஜி.ஆர். திட்டை சேர்ந்தவர் ஜானி (எ) அன்புதாஸ். 

 

jani

 

இவர் கடந்த 2014 ஜூலை மாதம் வேலைக்கு சென்ற இடத்தில்,  நாகை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த 16 வயது சிறுமியை தனது ஊருக்கு கடத்தி வந்து வன்கொடுமை செய்து கொலை செய்தார். இதுதொடர்பான வழக்கு கடலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு வழக்கறிஞர் செல்வப்பிரியா ஆஜரானார். வழக்கினை விசாரணை செய்த கடலூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி லிங்கேஸ்வரன் சிறுமியை கடத்தி, வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ஜானிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து  தீர்ப்பு அளித்தார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

 
The website encountered an unexpected error. Please try again later.