A double leaf-shock sprouted on the ammk banner

Advertisment

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுக யாருக்கு சொந்தம் என்று நீதிமன்றங்களின் கதவைத்தட்டி உரிமை போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் மேலும் சிலர் கட்சியும் இரட்டை இலையும் எங்களுக்கே சொந்தம் என்று ஆள் ஆளுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இபிஎஸ் - ஓபிஎஸ் அணிகளுக்கிடையேயான போராட்டத்தில் தற்போது இபிஎஸ் கை ஓங்கியுள்ளது.

இந்நிலையில் 24ம்தேதி ஜெயலலிதாபிறந்தநாளுக்கு ஆங்காங்கே பதாகைகள் வைத்து இனிப்புகள் வழங்கினார்கள். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அம்மா உணவகம் அருகே அறந்தாங்கி நகர அமமுக வைத்துள்ள ஜெ. பிறந்தநாள் பதாகையில் இரட்டை இலை சின்னம் பளபளக்கிறது. அதிமுகவில் உள்ள இரு அணிகளும் கட்சிக்காகவும் சின்னத்திற்காகவும் நீதிமன்றக் கதவுகளைத்தட்டிக் கொண்டிருக்கும் நிலையில் தனியாக கட்சி தொடங்கி குக்கர் சின்னமும் வாங்கி வைத்துள்ள அமமுக மறுபடியும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்த இப்படி இரட்டை இலையை தங்கள் பதாகையில் வைத்துள்ளனர் என்று அதிர்ச்சியில் பார்த்துச் செல்லும் ர ர க்கள், எங்கள் கட்சி சின்னத்தை தவறாகப் பயன்படுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவும் தயாராகி வருகின்றனர்.