இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு !! டிடிவி உட்பட நான்கு பேருக்கு முகாந்திரம் உள்ளது-டெல்லி நீதிமன்றம்!!

ttv

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி.தினகரன் உட்பட 9பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று இந்தவழக்கை டெல்லி நீதிமன்றம் விசாரித்தது.

இந்த வழக்கில்டிடிவி தினகரன் மீதான குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் உள்ளது. அதேபோல் சுகேஷ், மல்லிகார்ஜுனா, பி.குமார் ஆகியோர் மீதும் முகாந்திரம் உள்ளது. மற்ற ஐந்து பேரான லலித்குமார், நந்துசிங், புல்கித் குந்த்ரா,ஜெய்விக்ரம், நரேந்திர ஜெயின் ஆகியோர் மீதான குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இல்லை எனவே அவர்களை விடுதலை செய்வதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த வழக்கில் முகாந்திரமுள்ள மற்ற நால்வர் மீதான விசாரணையை தொடங்கவும் நீதிபதி அருண் பரத்வாஜ் ஆணையிட்டார்.மேலும்இந்த வழக்கில் வரும் டிசம்பர் 4 தேதி டிடிவி தினகரனை நேரில் ஆஜராக டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 17ஆம் தேதி ஒத்திவைத்தது.

Bribe case irattai ilai
இதையும் படியுங்கள்
Subscribe