Advertisment

''வண்டிய பொறுமையா ஓட்ட தெரியாதா?'-தனியார் பேருந்து ஓட்டுநரை தட்டிக்கேட்ட கல்லூரி மாணவன்   

தனியார் பேருந்துகள் அளவுக்கு அதிகமான வேகத்தில் செல்வதால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. அதேபோல் தனியார் பேருந்துகளுக்கும் அரசு பேருந்துகளுக்கும் இடையே ஏற்படும் போட்டி காரணமாகவும் விபத்துக்கள் ஏற்படுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் நோக்கி சென்ற ஒரு தனியார் பேருந்து அளவுக்கு அதிகமான வேகத்தில் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் சென்றதால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர் ஒருவர் ஓட்டுநரிடம் ஏன் பேருந்தை வேகமாக இயக்குகிறீர்கள் என தட்டிக் கேட்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisment

அந்த தனியார் பேருந்து ஓட்டுநரிடம் பேசும் கல்லூரி மாணவன், 'வண்டிய பொறுமையா ஓட்ட தெரியாதா? என கேட்க பேருந்து ஓட்டுநர் 'டைமிங்ல போகணும்' என சொல்கிறார். 'அது என்ன டைமிங். உயிர் போச்சுன்னா என்ன பண்ணுவ. இத்தனை பேர் இருக்காங்க அவங்களுக்கெல்லாம்பொண்டாட்டி பிள்ளைகள் இல்லையா?' என கேட்கும் அந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisment

busdriver kallakuruchi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe