ADVERTISEMENT

''கவலைப்படாதீங்க நல்லா சாப்பிடுங்கய்யா...''- ஓபிஎஸ்ஸுக்கு ஆறுதல் கூறிய ஆதரவாளர்கள்!

07:03 PM Jul 12, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

வழக்குகள், வாதங்கள், விசாரணைகள் என பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கிடையே வானகரத்தில் நேற்று அதிமுக பொதுக்குழு நடைபெற்று முடிந்தது. மறுபுறம் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு ரவுடிகள் தங்களை தாக்கியதாக ஓபிஎஸ் தரப்பும், எடப்பாடி தரப்பில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ரவுடிகள் தங்iகளை தாக்கியதாக மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்தநிலையில் தனது ஆதரவாளர்களை ஓபிஎஸ் சந்திக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பெண் ஒருவர், ''ஐயா முதல் அடியே எனக்குதான் ஐயா... ரெண்டாவது அடித்தான் பாபு அண்ணனுக்கு...'' என்றார். அதற்கு ஓபிஎஸ்- ''தனியா போயி மாட்டிகிட்டீங்களோ...'' என்றார். தொடர்ந்து பேசிய அந்த பெண் மற்றும் ஆதரவாளர்கள், ''ஒன்றரை கோடி தொண்டர்களும் உங்களுக்கு பின்னாலதான் ஐயா... கவலைப்படாம தைரியமா இருங்க... சிரிச்சுகிட்டே இருங்க... பொதுக்குழுவில் உட்கார்ந்தவங்க ஓபிஎஸ்-ஐ நீக்குறோம், வைத்தியலிங்கத்த நீக்குறோம்னு சொல்லும்போது மொத்தம் எத்தனைபேர் கைதட்டினாங்க... ஆசைக்கு அடிபட்டவன்தான் கைத்தட்டுனாங்க. மத்தவங்க எல்லாம் ஓபிஎஸ் ஆளுங்கதான். பின்னாடி இருந்த ஒருத்தங்க கூட கையே தட்டல... நாங்க இருக்கோம் நல்லா சாப்பிடுங்க ஐயா...'' என தெரிவித்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT