Advertisment

புத்தாண்டில் உயர் அதிகாரிகளை பார்க்க வரவேண்டாம்... குடும்பத்தோடு சந்தோசத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்... எஸ்.பி-யின் நெகிழ்ச்சி பேச்சு

புதுக்கோட்டை நகரில் ஆங்கிலப் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நம் காவல்துறை நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தபோது.. புத்தாண்டு பாதுகாப்பு பணி முடிந்து காலை மாவட்ட காவல் அதிகாரிகளை பார்த்து வாழ்த்து சொல்லவும், வாழ்த்துப் பெறவும் போகவேண்டியிருக்குமே என்றோம்.

Advertisment

 Don't welcome high officials in the New Year ... Share happiness with family ... SP's elasticity talk

இதுவரை அப்படித்தான் இருந்தது சார். ஆனா இந்த வருசம் எங்க எஸ்பி அருண்சக்திக்குமார் அப்படியே மாத்தி வாய்ப்புக் கிடைத்தால் குடும்பத்தைப் போய் பாருங்கள் என்று சொல்லி எங்களை மகிழ செய்திருக்கிறார் என்றவர் மேலும்,

Advertisment

மாலை மைக்கில் பேசிய எங்க எஸ்.பி சார்.. வாகனச் சோதனை குறித்து பேசிவிட்டு நாளை புத்தாண்டின் முதல் நாளில் உயர்அதிகாரிகளை பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்கள் பணியில் சிறிது ஓய்வு கிடைக்கும் நேரத்தை வீணாக்கி என்னை வந்து பார்க்க வேண்டாம். உங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு மாலை பணிக்கு வாருங்கள்.

 Don't welcome high officials in the New Year ... Share happiness with family ... SP's elasticity talk

அதையும் மீறி உயர் அதிகாரிகளை பார்த்தே ஆகவேண்டும் என்று நினைத்தால் என்னை பார்க்க வருவதைவிட இதுவரை கண்டுபிடிக்க முடியாத வழக்குகளை போய் பார்த்து கண்டுபிடிக்கலாம் இதையும் தாண்டி வந்தால் தேர்வு வைப்பேன் என்று சொல்லி இருக்கிறார்.

தொடர்ந்து தேர்தல் பாதுகாப்பு பணி அடுத்து இன்று புத்தாண்டு பணி நாளை ஒரு நாள் சிறிய ஓய்வு கிடைக்கும் போது மனைவி குழந்தைகளை பார்க்க எங்க எஸ.பி சார் சொல்லி இருப்பது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது என்று சொல்லி விட்டு வாகனங்களை ஒதுக்கி அனுப்பச் சென்றார்.

பல உயர் அதிகாரிகள் தங்களுக்கு கீழ் பணியாற்றும் அலுவலர்கள் தங்களை நேரில் பார்த்து பரிசு தர வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் குடும்பத்தை போய் பாருங்கள் என்று எஸ்.பி சொன்னது சிறப்பு தான்.

new year police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe