publive-image

திமுக அரசின் மீது அவதூறு பரப்பியதாக மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

அண்மையில் அரசு பேருந்தில் ஏறிய மூதாட்டி நான் ஓசியில் பயணம் செய்யமாட்டேன் டிக்கெட் கொடு என நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பெண்களுக்கு இலவசம் என தொடர்ந்து நடத்துநர் கூறியும் வேண்டாம் டிக்கெட் கொடு என வற்புறுத்தி டிக்கெட் வாங்கிக்கொண்டார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி இருந்தது. இந்த சம்பவம் கோவையில்நிகழ்ந்தது பின்னர் தெரியவந்தது.

Advertisment

கோவை குரும்பாளையத்தைச் சேர்ந்த மூதாட்டி துளசியம்மாள் இவ்வாறு நடந்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மூதாட்டி துளசியம்மாள், வீடியோ எடுத்து வெளியிட்ட பிருத்விராஜ், மதிவாணன், விஜய் ஆனந்த் ஆகியோர் மீது அவதூறு பரப்பியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிருத்விராஜ், மதிவாணன், விஜய் ஆனந்த் ஆகியோர் அதிமுக ஐடி விங்கினைச்சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்பொழுது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.