'Don't take bribes for the post of Chief Ministers' - Vijay warns

Advertisment

தமிழக வெற்றிக் கழகம் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் நிலையில் முதல் மாநாட்டை நடத்தி இருந்தார். அதனைத் தொடர்ந்து அண்மையில் புதியதாக அமைய இருக்கும் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடி வரும் பரந்தூர் மக்களை சந்தித்திருந்தார்.

கடந்த ஆண்டு பிப்.2 ஆம் தேதி தவெக கட்சியை விஜய் அறிவித்திருந்தார். தவெக கட்சி தொடங்கப்பட்டு இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவுக்கு கட்சியினர் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் மாவட்ட நிர்வாகிகளை விஜய் சந்திக்கும் நிகழ்வு பனையூரில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. இந்நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் புதிய நிர்வாகிகளுக்கு தவெக தலைவர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதியதாக நியமிக்கப்பட்ட 20 மாவட்டச் செயலாளர்களுடன் தனித்தனியாக விஜய் ஆலோசனை மேற்கொண்டார். பகுதி, பேரூர், ஒன்றிய செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர், துணைச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு மாவட்டச் செயலாளர்கள் சில மாவட்டங்களில் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்திருத்தது. தவெக மாவட்டச் செயலாளர்கள் பதவிகளுக்கு லஞ்சம் வாங்கக் கூடாது. லஞ்சம் வாங்குவதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விஜய் எச்சரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment

முன்னதாக தவெகவில் மாவட்ட நிர்வாகிகள், நகரத் தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், விழுப்புரத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதவிகளுக்கு பணம் வாங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.