Skip to main content

ஜம்மு காஷ்மீர் பிரச்சனையை அரசியலாக்க வேண்டாம்- ஜி.கே.வாசன்

Published on 04/09/2019 | Edited on 04/09/2019

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே வாசன் கடலூர் மாவட்டம் சிதம்பரம் காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் கட்சியினரின் குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்தார்.

அப்போது சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், சிவகங்கையில் நடைபெற்றுவரும் அகழ்வாராய்ச்சி பணியில் தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதனால் பண்டைய கால விபரம் குறித்து தகவல்கள் அதிகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே மத்திய அரசு அகழ்வாராய்ச்சிக்கு தேவையான நிதியை தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் நீர் மேலாண்மையை டெல்டா பகுதி மட்டுமல்லாமல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் முறையாக செயல்படுத்த வேண்டும். குடிமராமத்து பணிகள் சரியான முறையில் நடைபெற அரசு கண்காணிக்க வேண்டும். காவிரி டெல்டா கடைமடை வரை பாசன நீர் செல்ல அனைத்து நடவடிக்கையும் உடனே எடுக்க வேண்டும்.

 

Don't politicize Jammu and Kashmir issue - GK Vasan

 

சினிமா டிக்கெட் ஆன்லைன் மூலம் மட்டுமே விற்பனை செய்யவேண்டும் என்ற விதிக்கு தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டவர்களின் கருத்தை கேட்டு சுமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும்.  ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை ஏற்படும். அந்த பகுதியில் பொருளாதாரம் மேம்படும் இதனை எதிர்க்கட்சிகள் அரசியலாக்க வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அரசு தொகுப்பில் தமிழக அரசுக்கு 3 மெட்ரிக் டன் அரிசி வழங்க வேண்டும். பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் ஆகியவைகளுக்கு மானியத்தை குறைக்காமல் வழங்கவேண்டும். முதல்வரின் சுற்றுப்பயணம் மக்கள் நலம் சார்ந்தது. புதிய கல்விக் கொள்கை முறையில் மத்திய அரசு அடிதளமிட்டு செயல்படுகிறது.  சிதம்பரம் பகுதியில் ஆக்கிரமிப்பில் வீடுகட்டி உள்ளார்கள் என்று இடிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும்  உடனே வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்றார்.

 

Don't politicize Jammu and Kashmir issue - GK Vasan

 

முன்னதாக சிதம்பரத்தில் சிதம்பரம் காமராஜர் பேரவை செயலாளர் ஜீவாவிஸ்வநாதன் காமராஜருக்காக 50 ஆண்டுகள் விழா எடுத்து மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி தொடர்ந்து அன்னதானம் வழங்கியவர் சமீபத்தில் காலமானர். அவரது வீட்டுக்கு சென்று படத்திற்கு மரியாதை செலுத்தி குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தார்.

இவருடன் கட்சியின் மத்திய மாவட்ட தலைவர் புரச்சிமணி, மாநில செயலாளர் வேல்முருகன், எஸ்சி எஸ்டி பிரிவு மாநிலசெயலாளர் எம்கே பாலா, மாவட்ட செயலாளர் நாகராஜ், நகர தலைவர் மக்கீன், மாவட்ட இளைஞரணி தலைவர் ரஜினிகாந்த், மாவட்ட மாணவரணி தலைவர் மணிகண்டன், மாவட்டதுணைத்தலைவர் வைத்தி உள்ளிட்ட கட்சியினர் மற்றும் மகளிரணியினர் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன்'-விஷால் பேட்டி

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'It is because of the lack of all this that I am coming to politics' - Vishal interview

நடிகர் விஷால் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே, அறக்கட்டளையின் மூலம் மக்களுக்குப் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கடந்த 2017 ஆம் அண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக சுயேட்சை வேட்பாளராக மனுத் தாக்கல் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் புது அரசியல் கட்சி விஷால் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறப்பட்டது. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்த விஷால், வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால், அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என்று பேசியிருந்தார்.

இந்தநிலையில் நடிகர் விஷால் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஷால், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன் புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு வேட்பாளர் பட்டியலில் என் பெயரும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விஷால் பேசுகையில், ''அரசியலுக்கு வருகிறேன் என்று நான் ஏன் ஓப்பனாக சொல்கிறேன் என்றால் நான் எதையுமே மூடி மறைத்தது கிடையாது. எதற்கு விஷால் அரசியலுக்கு வரவேண்டும். நிறைய பேர் இருக்காங்களே. இவர் வந்து என்ன செய்யப் போகிறார் என்று கேட்பார்கள்.

மக்களுக்கு எந்த ஒரு குறையும் இல்லை. விவசாயிகளுக்கு எந்த குறையும் இல்லை. கிராமத்தில் குடிநீர் பிரச்சனை  இல்லை. ரோடு நல்லா போட்டிருக்கிறார்கள், தூர்வாரி இருக்கிறார்கள், மெட்ரோ இருப்பதால் டிராபிக் நெரிசல் இல்லாமல் நல்லாவே இருக்கிறது, சாலை எல்லாமே கரெக்டா இருக்கும்போது இவன் அரசியல் எதுக்கு தேவையில்லாமல் வரான் என்று கேள்வி எழுப்புவார்கள். ஆனால் இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன். அதுதான் உண்மை. அதுதான் என்னுடைய பதில். நல்லவேளை விஜயகாந்த் சார் மாதிரி என்கிட்ட கல்யாண மண்டபம் இல்லை. இல்லைன்னா இதை நான் சொன்னதனால் இடிச்சு தள்ளியிருப்பாங்க. டைம் வரும்போது சொல்கிறேன்'' என்றார்.

Next Story

'தேர்தல் பணியைவிட சிறுத்தையை பிடிப்பதே முதல் பணி'-ஜி.கே.வாசன்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
'The first task is to catch the leopard rather than the election task' - GK Vasan speech

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இரவில் நடமாடும் சிறுத்தையை பிடிக்கும் பணி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் நகரப் பகுதியில் உள்ள செம்மங்குளத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்த பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்களை வேட்டையாடும் வகையில் சிறுத்தை ஓடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சிறுத்தையின் கால்தடத்தை வைத்து அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்தனர்.

தொடர்ந்து மூன்று நாட்களாக அந்த பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் பாதுகாப்பு கருதி இன்று (04/04/2024) அந்த உள்ள 9  பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

சிறுத்தை தேடுதல் வேட்டையில் முதல் நாள் கேமராவில் சிக்கிய அந்த சிறுத்தை இரண்டாவது நாள் சிக்கவில்லை என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியநாதபுரம் பகுதியில் நேற்று இரவு வனத்துறையினர் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பின் தொடர்ந்ததால் சிறுத்தையை கண்டுபிடிக்கும் பணியில் கடும் பாதிப்பு ஏற்பட்டதாகவும், எனவே சிறுத்தையை பிடிக்கும் வரை வனத்துறையினரை பொதுமக்கள் பின் தொடர்ந்து இடையூறு செய்ய வேண்டாம் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சிறுத்தையை தேடும் பணிக்கு கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு கேட்கவும் வனத்துறை முடிவு செய்துள்ளது. கூறைநாடு, செம்மங்குளம், ஆரோக்கியநாதபுரம், சித்தர்காடு என பல இடங்களுக்கு தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருப்பது வனத்துறையினருக்கு அதனை பிடிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

பாராளுமன்ற தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் பொது மக்களுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை பகுதியில் பிரச்சாரம் செய்ய வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், 'தேர்தல் பணியை விட சிறுத்தையை பிடிப்பதே முக்கியம். ஏனென்றால் வாக்காளர்கள், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வைப்பது அரசின் கடமை' என தெரிவித்தார்.