makkal athigaram

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கூடாது என்றும், ஆலையை மூட சிறப்பு சட்டமன்றம் கூட்டி தீர்மானம் இயற்ற கோரியும் கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம், பாலக்கரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

13 பேர் உயிர் கொலையும், பல்லாயிரம் பேர் நோய் பாதிப்புக்கும் காரணமான ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முயற்சிக்கும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

Advertisment

மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள், இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.