Advertisment

'அன்புமணி விவகாரத்தை பெரிதாக்க வேண்டாம்'-தணிந்த ராமதாஸ்

PMK

பா.ம.க.வின் (நிறுவன) தலைவர் ராமதாஸுக்கும், அவரின் மகனும், அக்கட்சியின் (செயல்) தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணிக்கும் இடையே கட்சிக்குத் தலைமை தாங்குவது, வழிநடத்துவது தொடர்பாகக் கடுமையான பனிப்போர் நிலவி வருகிறது. இதற்கிடையே விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் கடந்த 29.05.2025 அன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் அன்புமணி மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.

Advertisment

'Don't make a big deal out of the Anbumani affair' -  Ramadoss Cool

தொடர்ந்து அடுத்தநாளே சென்னை சோழிங்கநல்லூரில் அன்புமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட முன்னாள் பாமக பெண் எம்எல்ஏ ஒருவர், 'ராமதாஸை நிர்ப்பந்தத்தின் காரணமாக சூழ்நிலைக் கைதியாக அவரை பயன்படுத்தி வருகிறார்கள். யாரோ சொல்லிக் கொடுத்ததை எழுதிக் கொடுத்ததை சொல்லி இருக்கிறார். அவர் நிச்சயமாக தன் பிள்ளையை அப்படி பேசியிருக்க மாட்டார்.ராமதாஸ் வீட்டைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும். சத்தியமாக சொல்கிறேன் வெள்ளிக்கிழமை அதுவுமாக சொல்கிறேன் அன்புமணி அப்படி பண்ணவில்லை. யாரோ சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். ஏதோ கோபத்தில் யாரோ அடித்ததை அன்புமணி அடித்ததாக சொல்லி வருகிறார்கள். ராமதாஸை தவறாகப் பயன்படுத்துகிறார்கள்' என தெரிவித்திருந்தார்.

'Don't make a big deal out of the Anbumani affair' -  Ramadoss Cool

இந்நிலையில் இன்று (01/06/2025) தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், ''என்னை யாரும் இயக்க முடியாது. சுதந்திரம் கிடைத்துள்ளது என்று அன்புமணி சொல்வது அவருடைய கருத்து. அன்புமணி விகாரம் குறித்து பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இது எல்லா கட்சிகளிலும் நடக்கும் ஒன்றுதான்' என தெரிவித்துள்ளார்.

Ramadoss anbumani ramadoss pmk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe