Skip to main content

'சிறிதும் செவிசாய்க்க வேண்டாம்..'-முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஞான ராஜசேகரன் எச்சரிக்கை! 

Published on 17/07/2022 | Edited on 17/07/2022

 

 'Don't listen a little..'-Former IAS officer Gnana Rajasekaran warns!

 

அண்மையில் கோவை மேயர் உட்பட பல மாவட்ட ஆட்சியர்களின் புகைப்படங்களை வைத்து மோசடி கும்பல் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டது தொடர்பான புகார்கள் எழுந்தது. அதிலும் குறிப்பாக சென்னை மேயர் ப்ரியாவின் புகைப்படத்தை வாட்ஸ் அப் டிபி ஆக வைத்து அவர் மெசேஜ் செய்வது போல் சென்னை மண்டல அதிகாரிகள் மூன்று பேரிடம் அமேசான் கிப்ட் கார்ட் மூலமாக அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பணம் கேட்டுள்ளனர்.  இது குறித்து தகவலறிந்த சென்னை மேயர் பிரியா  பெரியமேடு காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில் இந்த நூதன மோசடி குறித்து சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 'Don't listen a little..'-Former IAS officer Gnana Rajasekaran warns!

 

இந்நிலையில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான ஞான ராஜசேகரன் பெயரில் போலி கணக்குகள் உருவாக்கப்பட்டு மோசடி முயற்சி நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்து நிலையில், ஞான ராஜசேகரன் அவரது  ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 'அன்புடையீர், என் பெயரில் சில விஷமிகள் ஃபேக் ஐடி உருவாக்கி ஃபிரண்ட் ரிக்வெஸ்ட் செய்வதாகவும், அவசரமாக பணம் அனுப்பக் கோருவதாகவும் எனக்கு தகவல்கள் கிடைத்திருக்கின்றன. தயவு செய்து இதைப் போன்ற கோரிக்கைகளுக்கு சிறிதும் செவிசாய்க்க வேண்டாம் என்று எல்லோரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இது சம்பந்தமாக சைபர் க்ரைம் செல் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

 

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான ஞான ராஜசேகரன் பாரதி, பெரியார், முகம், மோகமுள் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

Published on 16/07/2024 | Edited on 16/07/2024
Transfer of various IAS officers

தமிழகத்தில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசின் அறிவிப்பின்படி, ஜவுளித்துறை ஆணையராக  ஐஏஎஸ் அதிகாரி ஜெயகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக இயக்குநராக மோகன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐஏஎஸ் அதிகாரி மோகன் 'முதல்வரின் முகவரி' திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக இருந்த நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது. 

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி கார்த்திகா நியமனம் செய்யப்பட்டுள்ளார். மீன்வளத்துறை மேலாண் இயக்குநராக  ஐஏஎஸ் அதிகாரி கஜலட்சுமி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை ஆணையர் தாக்கரே சுபம் ஞானதியோராவ் ஈரோடு வணிகவரி இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீதர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அறநிலையத்துறை ஆணையராக இருந்த முரளிதரன் சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் கூடுதல் ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி அதிஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சமூக சீர்திருத்தத்துறை செயலாளராக இருந்த ஆபிரகாம் தொழில்நுட்பக் கல்வி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்து துறை ஆணையராக இருந்து சண்முகசுந்தரம் கைத்தறித்துறை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்து துறை ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி சுஞ்சோங்கம் ஜடக் சிரு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை ஆட்சியர் மெர்சி ரம்யா ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு திட்ட ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ் தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாகை ஆட்சியராக இருந்த ஜானி டாம் வர்கீஸ் குழந்தை நலத்துறை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  இப்படியாக பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Next Story

10க்கும் மேற்பட்ட முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளின் துறைகள் மாற்றம்

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
Transfer of department for more than 10 key IAS officers

பத்துக்கும் மேற்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசின் உத்தரவின்படி தமிழக மருத்துவத்துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வனத்துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாகு மருத்துவத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை செயலாளராக இருந்த மணிவாசகம் நீர்வளத்துறை செயலாளராக  நியமிக்கப்பட்டுள்ளார்.  

பொதுப்பணித்துறை செயலாளராக இருந்த சந்திரமோகன் தற்போது சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் உயர்கல்வித்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீர்வளத் துறை செயலாளராக இருந்த சந்திப் சக்சேனா செய்தி மற்றும் அச்சு காகிதத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனராக ஜான் லூயிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளராக மங்கத் ராம் ஷர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இப்படியாக பத்துக்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.