Advertisment

ஹைட்ரோ கார்பன் எடுக்காதே! காவிரியை தடுக்காதே! காத்திருப்பு போராட்டத்தில் 5 மாவட்ட விவசாயிகள்!

காவிரியை தடுத்து டெல்டா மண்ணை தரிசாக்கி ஹைட்ரோ கார்பன் எடுத்து மண்ணை மலடாக்கி தமிழக விவசாயிகளை வெளியேற்ற திட்டமிட்டு செயல்படும் மத்திய பாஜக அரசயைும், தமிழக விவசாயிகளை தாய்மண்ணைவிட்டு விரட்ட துணை போகும் எடப்பாடி அரசயைும் கண்டித்தும் ஜூலை 2 தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் உள்பட காவேரி பாயும் 5 மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்காதே! காவேரியை தடுக்காதே! என்ற முழக்கத்துடன் காவிரி உரிமை மீட்புக்குழு மற்றும் டெல்டா விவசாயிகள் குழந்தைகளுடன் பெண்கள் என ஆயிரக்கணக்காணவர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

Advertisment

தஞ்சை நகரில் உரிமைக்காக உணர்வோடு காத்திருக்க வந்த விவசாயிகளுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் மறுத்ததால் நடுக்காவேரியில் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அனைவர் கைகளிலும் பதாகைகள், காவேரி ஆணையத்திற்கு முழுநேரத் தலைவரையும் அலுவலர்களையும் அமர்த்திடு, காவிரி நமது வளர்ப்புத் தாய்காவிரி நமது குருதி ஓட்டம்! போன்ற பல்வேறு பதாகைகளுடன் முழக்கங்களை எழுப்பினார்கள்.

Advertisment

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன்..

காவரி என்பது எங்கள் உரிமை அதை தடுக்க யாருக்கும் எந்த தகுதியும் இல்லை. ஆனால் ஆணையம் என்ற கண்துடைப்பு பொம்மை ஆணையத்தை வைத்துக் கொண்டு தண்ணீர் கொடு என்று சொல்வதோடு சரி, தண்ணீர் தரவில்லையே ஏன் திறக்கவில்லை என்று கர்நாடகத்திடம் கேள்வி எழுப்பி தண்ணீரை பெற்றுக் கொடுக்கும் உயிரோட்டமுள்ள ஆணையம் இது அல்ல. அதற்காகத்தான் சொல்கிறோம் அரசு அதிகாரியை தலைவராகவும், அலுவலர்களாகவும் நியமிக்க வேண்டும். இதை தமிழக அரசு வலியுறுத்தி பெற வேண்டும்.

இப்படி தண்ணீரை கொடுக்காமல் மண்ணை தரிசாக்கிவிட்டு ஹைட்ரோ கார்பன் எடுக்க நடுவனரசு பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கிறது. அதற்கு மீத்தேன் எடுக்க தடை விதித்த ஜெ பெயரில் இயங்கும் எடப்பாடி அரசு துணை போகிறது. அந்தம்மா பெயரில் மரியாதையும் மதிப்பும் இருந்தால் அவர் போட்ட தடையை மீறுவார்களா? இன்று ஒரு நாள் காத்திருப்பு போராட்டம். அடுத்தும் போராட்டங்கள் நடத்துவோம் என்றார்.

இந்த காத்திருப்பு போராட்டங்கள் ஹேஷ்டாக் தற்போதுடிரெண்டாகி வருகிறது.

delta districts Farmers hydro-carben Kaveri protest
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe