Skip to main content

" புட் ஃபோர்டு அடிக்காதீங்க பா..." - பேருந்தில் உதயநிதி ஏற்படுத்திய சிரிப்பொலி!

Published on 06/08/2022 | Edited on 06/08/2022

 

ரதக

 

கடந்த வருடம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது திமுக சார்பில் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. அதில் ஒன்று மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம். திமுக வெற்றிபெற்று மு.க.ஸ்டாலின், மே மாதம் 7ம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றார். அன்றைய தினமே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஐந்து முக்கியமான கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்தது நகர பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லா பயணம் திட்டம்.

 

இந்தத் திட்டம் மே.8ம் தேதி முதல் தமிழ்நாட்டில் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், கட்டணமில்லா பேருந்துகளைக் கண்டறிவதை எளிமையாக்கும் விதமாக தமிழ்நாடு அரசு கட்டணமில்லா பேருந்துகளை அடையாளம் காட்ட அதன் முகப்புகளில் பிங்க் நிற வண்ணத்தை அடிக்க முடிவு செய்தது. அதன்படி முதல் கட்டமாக 60 பேருந்துகளின் முகப்பில் பிங்க் நிறம் பூசப்பட்டுள்ளது. இந்தப் பேருந்துகளை சென்னை சேப்பாக்கம் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து துவக்கிவைத்தார். அப்போது அவர் பேருந்தில் அமர்ந்து சில நிமிடங்கள் பயணித்தார். அப்போது சிலர் பேருந்தில் புட் ஃபோர்டு அடித்து வந்தனர். அதைக்கண்ட அவர், புட் ஃபோர்டு  அடிக்காதீங்கப்பா என்று கூறினார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்