'Don't hesitate to go to the field' - Vijay's speech among administrators

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் தொடர்ந்து நிர்வாகிகளைச் சந்தித்து வரும் நிலையில், மாவட்டச் செயலாளர்கள் பட்டியலையும் வெளியிட்டு வருகிறார். அதன்படி இன்று (31/01/20250 மூன்றாம் கட்டமாக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

Advertisment

இதில் 19 மாவட்ட நிர்வாகிகள் பட்டியலை விஜய் வெளியிட்டார். இந்த சந்திப்பு ஆலோசனையின் பொழுது கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களையும் அக்கட்சியின் தலைவர் விஜய் வழங்கி வருகிறார். முன்னதாக நடைபெற்ற சந்திப்புகளில் '2026 நிச்சயமாக நம் கட்சி வெற்றி பெறும். கட்சிக்கு உண்மையாக நேர்மையாக உழைக்க வேண்டும். மக்கள் இயக்கமாக இருந்தபோது நன்றாக பணியாற்றி வந்தீர்கள், அதேபோல் கட்சிப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட வேண்டும். இப்போது உங்களை நம்பியே கட்சியை தொடங்கி இருக்கிறேன். மக்களுக்காகவே தமிழக வெற்றிக் கழகம். எனவே நீங்கள் மக்களுக்காக செயல்பட வேண்டும்' போன்ற அறிவுறுத்தல்களை வெளிப்படுத்தியிருந்தார்.

Advertisment

இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், 'உங்கள் உழைப்பில் தான் கட்சியின் வளர்ச்சி உள்ளது. நானும் உழைக்கிறேன் நீங்களும் உழையுங்கள். வெற்றி அடைவோம். களத்திற்கு செல்ல யாரும் தயங்கக் கூடாது. மக்கள் பிரச்சனைகளில் இனிதீவிரமாக இயங்க வேண்டும்' என விஜய் நிர்வாகிகள் மத்தியில் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.