Advertisment

“நேரத்துக்கு சாப்பிடுவதில்லை, சரியாக தூங்குவதும் இல்லை..” -ஓ.பி.எஸ். ‘செக்-அப்’ பின்னணி!

“Don't have food on time; There is no sleeping properly. ” Ops Check-up background

Advertisment

சென்னை, எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடல் நலம் விசாரித்துள்ளார்.

“வெறும் நார்மல்-செக்கப் தான்.. ஓ.பி.எஸ். நலமாகத்தான் இருக்கிறார்.” எனச் சொல்லும் அவரது ஆதரவு வட்டம் “வேறொன்றுமில்லை..” என்று நடந்ததைகூறினார்கள்.

“கரோனா ஊரடங்கு ஆரம்பித்ததிலிருந்து, ஓ.பி.எஸ். ஒரு இடத்தில் தங்குவதில்லை. சென்னையில் அரசு சார்பில் நடக்கின்ற கூட்டங்கள், மருத்துவமனைகளில் விசிட் என்று பம்பரமாகச் சுற்றினார். தேனி மாவட்டத்தில் ஆய்வுக்கூட்டம், சுகாதாரப் பணி, சலவைதொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது என பிசியாகவே இருந்தார். பிளைட் இல்லாததால், அடிக்கடி தேனிக்கும் சென்னைக்கும் என, கிட்டத்தட்ட 1 லட்சம் கி.மீ. காரிலேயே பயணித்திருக்கிறார். நேரத்துக்கு சாப்பிடுவதில்லை,சரியாகதூங்குவதும் இல்லை. அதனால் ஏற்பட்ட கண் வலியின் காரணமாக மருத்துவமனைக்குச் சென்றவரிடம்,“எல்லா செக்-அப்பும் பண்ணிக்கிட்டா நல்லது..” என்று அறுவுறுத்தியுள்ளனர். அதனாலேயே, உடல் பரிசோதனைக்கு ஒத்துக்கொண்டார். ஒவ்வொரு வருடமும், சபரிமலை பயணத்தின்போது, தன்னுடைய லக்கேஜை தானே தூக்கிக்கொண்டு அசராமல் நடப்பார் ஓ.பி.எஸ். உடல் ரீதியாக அவருக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. தற்பொழுது மருத்துவமனையிலிருந்து ஓபிஎஸ் டிஸ்சார்ச் ஆகியுள்ளார்''என்கிறார்கள்.

Advertisment

69 வயதென்பது ஓடி, ஓடி உழைக்கின்ற வயதில்லைதான். ஆனாலும், இந்த கரோனா காலக்கட்டத்தில், ஓ.பி.எஸ் ஏற்றுள்ள துணை முதல்வர் பொறுப்பு, அவரை ரொம்பவே ‘டிரில்’ வாங்கியிருக்கிறது.

admk corona virus ops
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe