Advertisment

'உக்ரைன் செல்ல வேண்டாம்...'- வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அறிவிப்பு

publive-image

Advertisment

உக்ரைன்- ரஷ்யா போர் காரணமாக உக்ரைனில் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை பயின்று வந்த மாணவர்கள் தொடர் முயற்சிகள் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து இந்தியாவில் படிப்பை தொடர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள், கல்வியாளர்கள் தரப்பில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் உக்ரைனிலிருந்து இந்தியா வந்த மாணவர்கள் இந்திய பல்கலைக்கழகங்களில் படிப்பைத் தொடர முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தது.

தமிழக அரசு சார்பில் உக்ரைனில் பயின்று போர்சூழல் காரணமாக சொந்த நாடான தாயகம் திரும்பியுள்ள இந்திய மாணவர்கள்இங்கேயே கல்வியைத் தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் எழுதப்பட்டிருந்தது. இந்நிலையில் உக்ரைனில் மீண்டும் போர் துவங்கியுள்ளதால் தமிழக மாணவர்கள் அந்நாட்டுக்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசின்வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அறிவித்துள்ளது.

education Russia Ukraine TNGovernment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe