Advertisment

'அங்கே போகாதீங்க...'- எச்சரித்தும் கேட்காத அரசு பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட்

'Don't go there...'-Government bus driver suspended for not listening to warning

Advertisment

தமிழகத்தில் கோடை காலம் காரணமாக பரவலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை பொழிந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.தமிழகத்தின் பல இடங்களில் கன மழை பொழிந்துள்ளது.

நேற்று நெல்லை மாவட்டம் வள்ளியூர் ரயில்வே சுரங்கப் பாதைக்கு அடியில் அரசு பேருந்து ஒன்று மழை நீரில் சிக்கிக் கொண்டது. நேற்று நெல்லையில் ஒரு மணி நேரம் பெய்த கனமழை காரணமாக வள்ளியூரில் இருந்து ராதாபுரம் செல்லக்கூடிய பகுதியில் உள்ளரயில்வே பாலத்திற்கு அடியில் மழைநீர் அதிகப்படியாக தேங்கியது. வள்ளியூரில் இருந்து திருச்செந்தூர் சென்ற பேருந்துமழை நீரில்சிக்கிக் கொண்டது. உடனடியாக தீயணைப்பு மற்றும்மீட்புப்படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்தமீட்புப்படையினர் பேருந்தில் சிக்கிக்கொண்ட 40 பயணிகளையும் பத்திரமாக மீட்டனர்.

'Don't go there...'-Government bus driver suspended for not listening to warning

Advertisment

இந்நிலையில் மழை நீரில் பேருந்தை செலுத்திய பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பேருந்து சுரங்கப்பாதையில் நுழைவதற்கு முன்பே சிலர் பேருந்தை தடுத்து நிறுத்தி இடுப்பளவிற்கு தண்ணீர் இருக்கிறது. உள்ளே சென்றால் பேருந்து சிக்கிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது என எச்சரித்துள்ளனர். ஆனால் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் ரவிக்குமார் எச்சரிக்கையை மீறி பேருந்தை இயக்கி சிக்கிக்கொண்டார். இந்த தகவல் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், தற்பொழுது ஓட்டுநர் ரவிக்குமாரை நாகர்கோவில் கோட்டமேலாளர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

suspended weather
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe