Published on 15/10/2018 | Edited on 15/10/2018

பன்றிக்காய்ச்சல் குறித்த அச்சம் மீண்டும் தொடங்கிவிட்டது. இதனால் பல வதந்திகளும் வருகின்றன. இந்தியாவின் சில பகுதிகளில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பன்றிக்காய்ச்சலை சமாளிப்பதற்கு தேவையான மருந்துகள் சேமிப்பில் இருக்கின்றன. வெளிமாநிலங்களிலிருந்து நோய் பரவாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சப்படவேண்டாம். என கூறினார்.