Advertisment

‘இன்றும் நாளையும் கல்லூரிக்கு வர வேண்டாம்’ - கல்லூரி முதல்வர் அறிவிப்பு!

‘Don’t come to college today and tomorrow’-College Principal Announcement

திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள அரசு கல்லூரியில் பணியாற்றும் பெண் பணியாளருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து இன்றும் நாளையும் பணியாளர்கள், மாணவர்கள் கல்லூரிக்கு வர வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் யாரும் கல்லூரிக்கு வர வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதனைத்தொடர்ந்து, தற்போது முதலாம் ஆண்டு சேர்க்கை நடைபெற்றுவரும் நிலையில், பணியாளருக்குத் தொற்று ஏற்பட்டதையடுத்து மாணவர்கள் யாரும் பாதிக்காத வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பேராசிரியர்கள் மாணவர்களின் சேர்க்கை குறித்த விவரங்களை உடனடியாக மாணவர்களின் பெற்றோர்களுக்குத் தெரிவித்து, இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர்கள் கல்லூரிக்கு வந்து தெரிந்துகொள்ள அறிவுறுத்த வேண்டும் என்று அக்கல்லூரியின் முதல்வர் சுகுமார் தன்னுடைய செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளார்.

Advertisment

GOVT COLLEGE musiri trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe